ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முடிவைத்தானேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் தமிழ்நாடு புதுமை மற்றும் புத்தாக்க முயற்சி திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட  வெளிமான்களுக்கான புதுமை மற்றும் புத்தாக்க மையம் இறுதி அறிக்கையினை வெளியிட்டு வனத்துறை அமைச்சர் மாண்புமிகு R.S. ராஜகண்ணப்பன் மாணவ, மாணவியர்களிடம் வனத்துறை வளர்ச்சி குறித்து பேசினார்.


ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, மாவட்ட வன அலுவலர் ரேவதிராமன், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


உடன் ஒட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர் பெருநாளி போஸ் மாநில வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் S.R. உமரிசங்கர் தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் மாவட்ட வழக்கறிஞர் அணி செல்வக்குமார் அரசு வழக்கறிஞர பூங்குமார் ஒன்றிய செயலாளர் S.R. சுப்பிரமணியன் இலக்கிய அணி முடிவை ஆறுமுகம்   ஒன்றிய துணை செயலாளர் நாராயணன் ஹரிபாலகிருஷ்ணன்  மாவட்ட பிரதிநிதி கணேசன் தகவல் தொழில்நுட்ப அணி வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.