ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராம பகுதிகளில் இயக்கப்படும் தடம் எண் 58 B தூத்துக்குடி முதல் சொக்கலிங்கபுரம் மற்றும் வடக்கு சிலுக்கன்பட்டி செல்லும் பழைய பேருந்துக்கு பதிலாக பொதுமக்கள் கோரிக்கை ஏற்று இன்று மேலதட்டப்பாறை கிராமத்தில் புதிய பேருந்தை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கொடியசைத்து இயக்கி வைத்து பேருந்தில் பயணம் செய்தார்.

நிகழச்சியில் கிளை மேலாளர் சங்கிலி தொ.மு.ச நிர்வாகிகள் லிங்குசாமி முருகன் மனோகரவேல் சரவணன் படையப்பா கணேஷ் ஒன்றிய செயலாளர் S.R. சுப்பிரமணியன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு இலக்கிய அணி ஆறுமுகம் மாவட்ட நெசவாளர் அணி பலவேசம் ஒன்றிய துணைச் செயலாளர் ஹரி பாலகிருஷ்ணா கந்தசாமி சங்கர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி முத்துமாரியம்மன் தகவல் தொழில்நுட்ப பணி வசந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

