தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதிகளில் சாலை, கால்வாய் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மழைக்காலத்திற்கு முன்பாக பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில், இப்பணிகள் சூழல் பாதுகாப்பு முறைகளுடன் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்த வகையில், தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டார். பணியின் தரம், முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி, பொதுமக்கள் வசதிக்காக பணிகளை விரைவாக நிறைவு செய்ய தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ஜெயக்குமார், கவுன்சிலர் ராஜேந்திரன், வட்டச் செயலாளர் நவநீதன், வட்ட பிரதிநிதிகள் ரஜினி முருகன், பாஸ்கர், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மணி அல்பட் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு – காமராஜ் கல்லூரி பகுதியில் மழைநீர் வடிகால் பணி வேகமாக முன்னேறுகிறது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாவட்ட கழக பொறுப்பாளர் TVA பிரைட்டர் தலைமையில் கல்வித் தந்தை டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாருக்கு மரியாதை!!
அடுத்த
தூத்துக்குடியில் இஎஸ்ஐ மருத்துவமனை விரைவில் செயல்பாட்டிற்கு வரும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026