தூத்துக்குடியில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து அவர்களின் 156வது பிறந்தநாளையொட்டி, எம்.ஜி.ஆர் பூங்கா அருகிலுள்ள குவிமாடத்துடன் கூடிய திருவுருவச் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாநகர ஆணையர் ப்ரியங்கா ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில், முன்னாள் நகர்மன்ற தலைவர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி எம்.ஜி.ஆர் பூங்கா அருகே இடம் ஒதுக்கப்பட்டு, ₹77.87 லட்சம் மதிப்பில் தமிழக அரசின் சார்பில் குவிமாடம் மற்றும் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கப்பட்டது. இது தூத்துக்குடி மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றியதாக மாநகர மக்கள் தெரிவித்தனர்.
விழாவில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், தாசில்தார் திருமணி ஸ்டாலின், மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், மாநகர துணைச் செயலாளர் கீதாமுருகேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம் உள்ளிட்ட பல்வேறு கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும் வக்கீல் பாலகுருசுவாமி, அன்னலட்சுமி, நிா்மல்ராஜ், மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி, தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், மேகநாதன், ஜெயக்குமார், கவுன்சிலர்கள் வைதேகி, பவாணி, விஜயகுமார், இசக்கிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
போல்பேட்டை, பால்பாண்டி நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வட்டச்செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், மாணவரணி, தொழிலாளர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி ஆகியவற்றின் நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றதால் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி
அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் குரூஸ் பர்னாந்து திருவுருவச் சிலைக்கு அரசு மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“தூத்துக்குடியில் நேரு நூற்றாண்டு நினைவு — ஐஎன்டியூசி தலைமையில் மரியாதை விழா”
அடுத்த
“தூத்துக்குடி மக்களின் நீர் நாயகனை நினைவுகூர்ந்த சமத்துவ மக்கள் கழகம் – குரூஸ் பர்னாந்துவிற்கு மரியாதை”
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026