தூத்துக்குடியில் இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவகர்லால் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு ஐஎன்டியூசி சார்பில் நினைவு விழா சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ லட்சுமி மஹாலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளர் பெருமாள் சாமி நேருவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நாட்டின் முன்னேற்றத்திற்காக நேரு மேற்கொண்ட செயல்பாடுகள், தொழிலாளர்கள் நலனுக்கான அவரது கொள்கைகள் மற்றும் இந்திய வளர்ச்சியில் அவர் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்து நிகழ்ச்சியில் பேசப்பட்டு நினைவு கூரப்பட்டது.

அகில இந்திய ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன், மாவட்ட பொது செயலாளர் இக்னேஷியஸ், பழங்குடியினர் பிரிவு முனியசாமி, வர்த்தக பிரிவு நேரு, ரூஸ்வெல்ட், ஆராய்ச்சி துறை சிவராஜ் மோகன், முன்னாள் எஸ்சி/எஸ்டி பிரிவு தலைவர் ராஜாராம் உள்ளிட்ட பல்வேறு பிரிவு நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். மேலும் இசக்கியம்மாள், உமாமகேஸ்வரி, வழக்கறிஞர் செல்வம், செல்வ முருகன், காமராஜ், சேக்ஸ்பியர், சிவலிங்கம், முத்து ரமேஷ், கிரிதரன், பாலன் உள்ளிட்டோர் பங்கேற்று நேருவின் நாட்டுப்பணிகளுக்கு மரியாதை செலுத்தினர்.