தூத்துக்குடி நகர மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கி நகர வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய முன்னாள் நகர மன்ற தலைவர், நன்னீர் வழங்கிய நாயகன் என போற்றப்படும் ஐயா ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து அவர்களின் 156வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
தூத்துக்குடியில் அமைந்துள்ள அவரது முழு உருவச் சிலைக்கு மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில், நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் முன்னிலையில், மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட் அவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் லயன் பழனிவேல், பொதுக்குழு உறுப்பினர் உதயசூரியன், மாவட்ட துணைச் செயலாளர் அருள்ராஜ், மாவட்ட தொண்டரணி செயலாளர் முத்துசெல்வம், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் குருவம்மாள், மாநகர தொண்டரணி செயலாளர் காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி
“தூத்துக்குடி மக்களின் நீர் நாயகனை நினைவுகூர்ந்த சமத்துவ மக்கள் கழகம் – குரூஸ் பர்னாந்துவிற்கு மரியாதை”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் குரூஸ் பர்னாந்து திருவுருவச் சிலைக்கு அரசு மரியாதை!!
அடுத்த
“நன்னீர் நாயகன் குரூஸ் பர்னாந்துவின் 156வது பிறந்தநாளை முன்னிட்டு — தூத்துக்குடி மாநகர மதிமுகவினர் மரியாதை செலுத்தினர்”
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026