தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் அவர்கள், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் சிறப்பாக நடைபெற, திமுக பாகமுகவர்கள் முழுமையான ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எஸ்.ஐ.ஆர். (Special Intensive Revision) எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை நடைபெறுகிறது. இந்தக் காலகட்டத்தில் பாகமுகவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் விழிப்புடன் இருந்து, ஒவ்வொரு தகுதியுள்ள வாக்காளரின் பெயரும் பட்டியலில் இடம்பெற உறுதி செய்ய வேண்டும்.
பாகமுகவர்கள் தங்களுக்குரிய பாக நிலை அலுவலர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, ஒவ்வொரு வாக்காளருக்கும் இரண்டு கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டு, அவை பூர்த்தி செய்யப்பட்டு திருப்பி பெறப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். இரு படிவங்களிலும் வாக்காளரும், பாக நிலை அலுவலரும் கையொப்பமிட வேண்டும்.
ஒருவேளை வாக்காளர் வெளியூரில் இருப்பின், அவரது தாய் அல்லது தந்தை போன்ற குடும்ப மூத்தோர் அவருக்குப் பதிலாக கையொப்பமிடலாம் என தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அத்துடன், கையொப்பமிடுபவர் வாக்காளருடன் உள்ள உறவுமுறையையும் குறிப்பிட வேண்டும்.
2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள், அதில் காணப்படும் தகவல்களை நிரப்பி, தற்போதைய வண்ண பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் படிவத்தை சமர்ப்பித்தால் போதுமானது. 2002 வாக்காளர் பட்டியலில் பெற்றோரின் பெயர் உள்ள வாக்காளர்கள், அவர்களின் பாக எண் மற்றும் வரிசை எண்ணை குறிப்பிட வேண்டும். பெற்றோரோ, வாக்காளரோ 2002 பட்டியலில் இடம்பெறவில்லை எனில், வயது மற்றும் இருப்பிடச் சான்றுகள் இணைக்கப்பட வேண்டும். இதற்காக தேர்தல் ஆணையம் அங்கீகரித்த 12 ஆவணங்கள் இருப்பதை பாகமுகவர்கள் அறிந்திருக்க வேண்டும்.
மேலும், 2026 ஜனவரி 1-ஆம் தேதியன்று 18 வயது நிறைவடையும் புதிய வாக்காளர்கள், கணக்கீட்டு படிவத்துடன் படிவம் 6-ஐ இணைத்து வழங்க வேண்டும். தற்போதைக்கு “நாம் யாருமே வாக்காளர் அல்ல” என்பது போல் நிலைமை இருப்பதாகவும், ஒவ்வொருவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை சரியாக நிரப்பினால்தான் 2026 தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பதையும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், பாகமுகவர்கள் ஒருநாளுக்கு 50 கணக்கீட்டு படிவங்களை வழங்கும் அதிகாரம் பெற்றுள்ளனர் என்பதையும் நினைவூட்டியுள்ளார். தகுதியுள்ள நபர்கள் விடுபடக்கூடாது, தகுதியற்றோர் சேரக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு பாகமுகவர்கள் செயலாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக பாகமுகவர்கள் தங்கள் பகுதிகளில் வீடு வீடாக சென்று, வாக்காளர்களிடம் வயது சான்று, இருப்பிட சான்று, வண்ண புகைப்படம் போன்ற ஆவணங்களை தயாராக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும். பாக நிலை அலுவலர்களுடன் இணைந்து வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இறுதியாக, டிசம்பர் 9-ம் தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் அனைத்து தகுதியுள்ள வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனரா என்பதை பாகமுகவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாதபட்சத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் காலகட்டத்தில் திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
வாக்குரிமை உறுதிசெய்ய தீவிரம் காட்டுங்கள் – பாகமுகவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோள்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகரில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை கொசு மருந்து தெளிக்க மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவு!!
அடுத்த
அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் இந்துஸ்தான் கல்லூரி, ஜெயின் பல்கலைக்கழகம் அணிகள் சாம்பியன் பட்டம்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026