ஒட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா தலைமையில் மாப்பிள்ளையூரணி சோனா மஹாலில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 500 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை இ-பட்டா வழங்கப்பட்டது.


நிகழ்ச்சியில் பேசிய அவர், அரசு அறிவித்துள்ள வீட்டு மனை திட்டம் மூலம் பல ஆண்டுகளாக நிலம் இல்லாமல் தவித்த குடும்பங்களுக்கு உரிமை கிடைத்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். வீட்டு மனை உரிமை கிடைப்பது சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமையும் என்றும் கூறினார்.


பின்னர் பயனாளிகளுக்கு நேரில் பட்டாக்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் திமுக கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள் உள்ளாட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 3.30 மணிக்கு ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கலப்பைபட்டி சமுதாய நலக்கூடத்தில் 121 பயனாளிகளுக்கும், மாலை 4.30 மணிக்கு இளவேலங்கால் சமுதாய நலக்கூடத்தில் 39 பயனாளிகளுக்கும் இலவச வீட்டு மனை இ-பட்டா வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.