தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் அரசியல் மாற்றம் ஒன்றாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் உரிமை மீட்பு கழக ஓபிஎஸ் அணியின் மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் 300-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
ஓபிஎஸ் அணியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பூர் சீனி (எ) ராஜகோபால் தலைமையில், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் சின்னத்துரை, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் சொரிமுத்து, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், விளாத்திகுளம் நகரச் செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர்.
இந்த இணைப்பு நிகழ்வு G. V. மார்க்கண்டேயன் முன்னிலையில் நடைபெற்றது. அவர் தற்போது விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவராகவும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.
நிகழ்வில் விளாத்திகுளம் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி உள்ளிட்ட பல்வேறு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு புதியவர்களை வரவேற்றனர்.
மேலும் வடக்கு மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் துரைப்பாண்டியன், முன்னாள் ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், புதூர் பேரூர் வார்டு உறுப்பினர் வெற்றிவேலன், அயலக அணி துணை அமைப்பாளர் அழகுராஜ், தகவல் தொழில்நுட்ப மற்றும் சமூக வலைதள அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.