தூத்துக்குடி திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி கோவில் குடமுழுக்கு விழா வரும் 7 ம் தேதி நடைபெறுகிறது. அதனையொட்டி தூய்மை பணியை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தூத்துக்குடி மாநகராட்சி 50 தூய்மை பணியாளர்கள் திருச்செந்தூர் செல்கின்றனா்.
அவா்களது வாகனத்தை கொடியசைத்து மேயர் ஜெகன் பொியசாமி வழியனுப்பி வைத்த பின்னர் கூறுகையில் திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்பதற்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவையும் கடந்து வௌிநாடுகளை சேர்ந்த பக்தா்கள் சுமாா் 2 லட்சம் வரை பங்கேற்பாா்கள் என எதிர்பாா்க்கப்படும் நிலையில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க கனிமொழி எம்.பி நேரடி பாா்வையில் அமைச்சர்கள் சேகா்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாாிகள் அப்பணியை முழுமையாக கண்காணித்து பணிகள் நடைபெற்று வரும் நிலையில், திருச்செந்தூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுடன் இணைந்து தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பணியாளா்கள் நகராட்சி பகுதி முழுவதும் சுகாதாரத்தை பேணி பாதுகாக்கும் பொருட்டாக முழுநேர பணியாளராக இன்று முதல் குடமுழுக்கு விழா முடிந்த பின்பு 10ம் தேதி வரை தூய்மை பணியில் ஈடுபடுவாா்கள் முதலமைச்சாின் உத்தரவிற்கிணங்க பணிகளை மேற்கொள்ளும் தூய்மை பணியாளா்களுக்கு தங்கும் இடம் வசதி உள்பட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மாநகராட்சி சாா்பில் முத்தையாபுரம் உப்பாற்று ஓடை பகுதியில் பக்தா்களுக்கு தங்கும் காற்றோட்டமான பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதையும் பக்தா்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் மாநகராட்சி பகுதிக்குள் வந்து செல்லும் வாகனங்களுக்கு இடையூறு இல்லாத நிலையில் அப்பகுதி ஓழுங்குப்படுத்தப்பட்டுள்ளது. என்று தொிவித்தாா்.
உடன் ஆணையா் பானோத் ம்ருகேந்தர் லால், இணை ஆணையா் சரவணக்குமாா், நகா்நல அலுவலா் சரோஜா, சுகாதார ஆய்வாளா்கள் நெடுமாறன், கண்ணன், ராஜபாண்டி, மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமாா், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், ஆணையாின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயாின் நோ்முக உதவியாளர் ரமேஷ், உள்பட பணியாளா்கள் ஊழியர்கள் உடனிருந்தனா்.
தூத்துக்குடி
திருச்செந்தூரில் ஜூலை 7ம் தேதி குடமுழுக்கு விழாவையொட்டி தூய்மை பணியை மேற்கொள்ள தூத்துக்குடி மாநகராட்சியிலிருந்து 50 தூய்மை பணியாளர்கள் செல்லும் வாகனத்தை மேயர் ஜெகன் பொியசாமி கொடியசைத்து வழியனுப்பி வைத்தாா்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் மு. புதுக்கிராமம் கிராமத்தில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டிடத்தை எம்எல்ஏ சண்முகையா திறந்து வைத்தார்!!
அடுத்த
லாக்கப்பில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கில் போலீசாருக்கு அதிகட்சமான தண்டனை கிடைத்திட தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் வலியுறுத்தல்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026