விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அவர்கள் மக்கள் தளபதி விஜய் அவர்களைப் பற்றி தரக்குறைவான முறையில் பேசியது கடுமையாக கண்டிக்கத்தக்கது என தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் திரு எபனேசர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் விளாத்திகுளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுகவின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ள மார்க்கண்டேயன் அவர்கள், தளபதி விஜய் குறித்து ஆபாசமான மற்றும் மரியாதையற்ற வகையில் பேசியது மக்கள் மனதை புண்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.
மேலும், “மார்க்கண்டேயன் அவர்கள் கடந்த காலத்தில் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, அரசின் சொந்த குளங்களை தனது ஆதரவாளர்களின் பெயரில் பட்டா பெற உதவி செய்ததும், அரசு செலவில் தனது குடியிருப்புப் பகுதியில் பூங்கா அமைத்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதும், விளாத்திகுளம் மக்களுக்குத் தெரிந்த உண்மைகள். இவ்வாறான பின்னணி கொண்டவர் தளபதி விஜய்யை விமர்சிப்பது மிகப் பெரிய செயலாகும்” எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அவர் மேலும் வலியுறுத்தியதாவது:
“வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் விளாத்திகுளம் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் வலுவான வேட்பாளரை நிறுத்தி மாபெரும் வெற்றி பெறும். மார்க்கண்டேயன் அவர்கள் படுதோல்வி அடைவது உறுதி. இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் புதிய ஆட்சியை தமிழக வெற்றி கழகத் தலைவர் தளபதி விஜய் அவர்கள் தலைமையில் அமைப்போம். அப்போது மார்க்கண்டேயன் அவர்கள் செய்த ஊழல்கள் ஒன்றன்பின் ஒன்று வெளிச்சம் காணும். தளபதி விஜய் அவர்களைப் பற்றி தவறாக பேசியதற்காக உடனடியாக அவர் மன்னிப்பு கோர வேண்டும்” என எபனேசர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஊழல் வெளிச்சம் காணும் – தூத்துக்குடி வடக்கு மாவட்ட தவெக துணைச் செயலாளர் எபனேசர் எச்சரிக்கை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மதிமுக செயலாளர் முருகபூபதி தலைமையில் பத்ம ஶ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் மரியாதை!!
அடுத்த
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனை மரியாதை நிமித்தமாக சந்தித்த மகளிர் அணி துணைச் செயலாளர்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026