தூத்துக்குடி, அக்டோபர் 5
சசாயா மாதா ஆலய பங்கு மற்றும் SR இருதய சிகிச்சை மையம் (SR HEART CARE) இணைந்து இன்று மாபெரும் இலவச பொதுமருத்துவம் மற்றும் இருதய பரிசோதனை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
காலை 8.30 மணி முதல் லயன்ஸ் டவுண் பகுதி சகாய மாதா ஆங்கில பள்ளி வளாகத்தில் (கோவில் அருகில்) நடைபெற்ற இம்முகாமில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு பல்வேறு பரிசோதனைகளில் ஈடுபட்டனர்.
இந்த இலவச இருதய மருத்துவ முகாமில் :-
1. இரத்த அழுத்தம் (BP)
2. ECG பரிசோதனை
3. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு (Random Blood Sugar)
4. இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவு (Lipid Profile)
எனும் பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன.
இதய நலன் குறித்த ஆலோசனைகளையும், தேவையான மருந்து வழிகாட்டுதல்களையும் நிபுணர்கள் வழங்கினர்.
முகாமை டாக்டர் ஆர். சஹாயா ஃப்ரான்சிஸ் அகிஸ்டன், M.B.B.S., M.D., (Gen. Med.), D.M., (Cardiology) தலைமையில் SR HEART CARE சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டது.
இலவச மருத்துவ முகாமை லயன்ஸ் டவுண் சகாயா மாதா ஆலய பங்கு தந்தை பிரதீபன் தொடங்கி வைத்தார்.
இந்த முகாமின் மூலம் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயனடைந்தனர். இதய நோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இம்முகாம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி
லயன்ஸ் டவுன் பரிசுத்த சசாயா மாதா ஆலய பங்கு மற்றும் SR இருதய சிகிச்சை மையம் (SR HEART CARE) இணைந்து இலவச இருதய பரிசோதனை முகாம் – நூற்றுக்கணக்கானோர் பயன்பெற்றனர்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கரூரில் மக்கள் மீது பொய் வழக்கு – அடக்குமுறையா? அடிப்படை உரிமை மீறல் என மக்கள் நல உரிமை அமைப்பு கண்டனம்!!
அடுத்த
இஸ்ரேல் – அமெரிக்கா இனப்படுகொலை கண்டனம் : வக்பு திருத்த சட்டம் திரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026