தூத்துக்குடியில் பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்யும் இஸ்ரேல் – அமெரிக்காவை கண்டித்து, மேலும் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தமிழ்நாடு உள்ளாட்சி, நகராட்சி, கிராமப்புற நகராட்சி தேர்தல்களில் இஸ்லாமியர்களுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரியும், தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு (IFTN) மற்றும் அதனை சார்ந்த அனைத்து ஜமாத், தோழமை கட்சிகள், சமூக அமைப்புகள் இணைந்து தூத்துக்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி விவிடி சிக்னல் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள கப்பலோட்டிய தமிழர் பக்கீர் முகமது திடலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஐஎஃப்டிஎன் மாவட்ட தலைவர் சையத் அலி தலைமையேற்று நடத்தினார்.
நிகழ்ச்சியில் மாநில துணைச் செயலாளர் ஜாகிர் உசேன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட துணைத் தலைவர் கிதர் பிஸ்மி வாழ்த்துரை வழங்கினார். மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தி, “பாலஸ்தீன மக்கள் மீதான கொடுமை மனிதநேயத்துக்கு எதிரானது. இந்தியா அமைதிக்குரல் கொடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார். அதேபோல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாநில துணைத் தலைவர் சாத்தூர் எஸ். சையது இப்ராஹிம், “இஸ்லாமியர்களின் அரசியல் பங்குக்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டும்” என கூறினார்.
சிறப்புரை நிகழ்த்தியவர்கள்:
முஸ்லிம் லீக் வர்த்தக அணி பொருளாளர் என்.டி. சலாவுதீன், ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு, தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பேச்சாளர் எஸ். அப்துல் மஜீத், முஸ்லிம் தொண்டு இயக்க மாநில துணைத் தலைவர் பாவா ஷேக்கானா, எஸ்டிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் மைதீன் கனி, தமிழர் விடியல் கட்சி மாவட்ட பொறுப்பாளர் சேமா சந்தன்ராஜ், புரட்சிகர இளைஞர் முன்னணி பொறுப்பாளர் சுஜித், இந்திய கிறிஸ்தவ மறுமலர்ச்சி இயக்க ஒருங்கிணைப்பாளர் தங்கை, தாயக மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஆர். அஹமது, ஐஎஃப்டிஎன் திருச்செந்தூர் பொறுப்பாளர் ராசிக் முஸம்மில், அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு கிருஷ்ணமூர்த்தி, மக்கள் நல இயக்கம் மாநில தலைவர் சா.மு. காந்தி, மின்னல் அம்ஜத், அறுசுவை இப்ராஹிம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கலந்துகொண்ட முக்கிய நிர்வாகிகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணைத் தலைவர் நவரன் சகாப்தீன்,
தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் என். மைதீன், ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் மாநில துணைச் செயலாளர் ஏ. அப்பாஸ், MAC காம்ப்ளக்ஸ் வியாபாரிகள் சங்க தலைவர் கே. மீராசா, மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முகமது நஜீப்,
முஸ்லிம் நலச்சங்க தலைவர் ஏ.கே. மைதீன், தமிழ்நாடு காங்கிரஸ் விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் எம்.எம். ராஜதீன், தமிழர் விடியல் கட்சி, தாயக மக்கள் கட்சி, புரட்சிகர முன்னணி, கிறிஸ்தவ மறுமலர்ச்சி இயக்கம் உள்ளிட்ட பல சமூக மற்றும் அரசியல் அமைப்பினர் தங்கள் கண்டனக் குரலை பதிவு செய்தனர்.
அனைத்து ஜமாத்தார்களும், பள்ளி நிர்வாகிகளும், பொதுமக்களும் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டு “பாலஸ்தீனுக்கு நீதி வேண்டும்” என்ற முழக்கத்துடன் குரல் கொடுத்தனர். இறுதியாக ஐஎஃப்டிஎன் மாவட்ட துணைச் செயலாளர் மின்னல் அம்ஜத் நன்றயுரை நிகழ்த்தினார்.
தூத்துக்குடி
இஸ்ரேல் – அமெரிக்கா இனப்படுகொலை கண்டனம் : வக்பு திருத்த சட்டம் திரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
லயன்ஸ் டவுன் பரிசுத்த சசாயா மாதா ஆலய பங்கு மற்றும் SR இருதய சிகிச்சை மையம் (SR HEART CARE) இணைந்து இலவச இருதய பரிசோதனை முகாம் – நூற்றுக்கணக்கானோர் பயன்பெற்றனர்!!
அடுத்த
வீரநாயக்கன்தட்டில் உப்பாற்று தூர்வாரும் பணிகள் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026