தமிழர்களின் நில வாழ்வும் பண்பாட்டும் இணைந்த பாரம்பரிய மாடுகளை காக்கும் நோக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன், சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பதிவு செய்த வீடியோவும் புகைப்படமும் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

“மண்ணுல விதை விதைக்க மாட்டையே நம்பி இருப்போம்… தெய்வமா அத தொழுது நெற்றியில் பொட்டு வைப்போம்… ஏர் ஓட்ட மாடு இருந்தா ஏழையே இல்லையடா” என்ற வரிகளை உருக்கமாகப் பகிர்ந்த அவர், தமிழர் வாழ்க்கைமுறையில் மாட்டு இனங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

மாடு அருகில் நின்றபடி அவர் பதிவுசெய்திருக்கும் புகைப்படத்தையும், பாரம்பரிய மாடுகளை காப்பதன் அவசியத்தை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு வீடியோவையும் தனது வாட்ஸ்அப் தளத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் இளைஞர்கள் மத்தியில் பாரம்பரிய மாட்டு இனங்களை பாதுகாப்பது குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளதாக சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் எழுந்துள்ளன.

தமிழர் பண்பாட்டு மரபை பாதுகாப்பதில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் மேற்கொண்ட முயற்சி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.