காலியான மது பாட்டில்களை அரசின் TASMAC கடைகளில் திருப்பித் தந்தால் ரூ.10/- வழங்கும் திட்டம் தூத்துக்குடியில் தொடங்கியுள்ள நிலையில், இந்த திட்டம் நடைமுறைக்கு வர நான்கு ஆண்டுகளாக அறவழியில் தொடர்ந்து போராடிய சமூக செயற்பாட்டாளர் ‘பசுமை’ பி. பாலகிருஷ்ணன் தனது வெற்றியைப் பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ள முயன்ற போது பரபரப்பு ஏற்பட்டது.
அரசுத் திட்டம் அமல்படுத்தப்பட்டதற்கான நன்றியை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு சென்ற பசுமை பாலகிருஷ்ணன், அங்கு கேக் வெட்டி, தூத்துக்குடி மக்ரோன் இனிப்புகளை வழங்கி விழாவை நடத்தத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே போலீசார் இடைமறித்து அனுமதி மறுத்ததோடு, பொது இடத்தில் கூடுகை ஏற்படுத்த முடியாது எனக் கூறி, அவரை உடனடியாக இருசக்கர வாகனத்தில் ஏற்றி அந்த இடத்திலிருந்து அழைத்துச் சென்றனர். மேலும், அவர் நான்கு ஆண்டுகளாக விழிப்புணர்வு நடவடிக்கைகளில் பயன்படுத்தி வந்த பிரச்சார சைக்கிளும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
போராட்டத்தின் பின்னணி
04.10.2021 முதல், காலியான மது பாட்டில்களை திருப்பித் தரும் நடைமுறையை அரசு அமல்படுத்த வேண்டுமென முதல்வர் முதல் அனைத்து அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், உயர்மட்ட அதிகாரிகள், காவல்துறை உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு பதிவு தபால்கள் அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்துள்ளார் பசுமை பாலகிருஷ்ணன்.
அவரது மனுக்களை துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அவ்வப்போது பரிசீலித்து, ஒப்புகைச் சீட்டுகள் வழங்கி ஊக்கப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் பேரில், 2025 டிசம்பர் மாதம் முதல் தூத்துக்குடியிலும் காலியான மது பாட்டில்களுக்கு ரூ.10/- வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதனை அவர் தனது “நான்கு ஆண்டுக் கனவு நிறைவேற்றம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“கொண்டாட்டம் செய்ய வந்தேன்… போலீஸ் கூட்டிச் சென்றது வருத்தம்; ஆனால் திட்டம் செயல்பட்டது மகிழ்ச்சி” — பசுமை பாலகிருஷ்ணன்
“பசுமை பாதுகாப்புக்காக மேற்கொண்ட என் போராட்டம் வெற்றி பெற்றது. அதுவே எனக்கு உண்மையான கொண்டாட்டம்” என பசுமை பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி
“4 ஆண்டு பசுமை போராட்ட வெற்றியை கொண்டாட வந்தவர்… கேக் வெட்டுவதற்கு முன்பே போலீஸ் கூட்டிச் சென்ற பரபரப்பு!”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தமிழர் பாரம்பரிய மாட்டை கொண்டாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன்!!
அடுத்த
சமூகநலன் அமைச்சர் கீதாஜீவன் – மாற்றுத்திறனாளி ஆறுமுகத்துக்கு மாமன்ற உறுப்பினர் நியமன வாழ்த்து!!
இதையும் படிக்கலாம்
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026