தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெற்று வரும் தசரா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னதானம், ஊர்வலங்கள் என பக்தி பரவசத்தில் நடைபெற்று வரும் இவ்விழாவின் உச்சக்கட்ட நிகழ்ச்சியாக நள்ளிரவில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியை காணவும் செய்திகளை சேகரிக்கவும் பத்திரிகையாளர் மற்றும் புகைப்படக்காரர்கள் அனுமதி அட்டை பெற்றிருந்த போதிலும், கோவில் நுழைவாயிலில் காவல்துறை ஒருவரையும் உள்ளே அனுமதிக்காமல் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அனுமதி அட்டை இருந்தும் தடுப்பதோடு மட்டுமின்றி, காவல்துறையினர் அலட்சியமான பதில் அளித்ததாக ஊடகவியலாளர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். இதனால், விழாவின் சிறப்பான தருணங்களை பதிவு செய்ய முடியாமல் நுழைவாயிலிலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருக்கும் நிலையில், சூரசம்ஹார நிகழ்ச்சியை நேரடியாக பதிவு செய்ய முடியாத நிலைமைக்கு காரணமான காவல்துறையின் நடவடிக்கை ஊடக உலகில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி
குலசேகரபட்டினம் தசரா விழா – சூரசம்ஹார நிகழ்ச்சி செய்தியாளர்கள் தடை! காவல்துறையின் அலட்சியத்தால் பரபரப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையருக்கு தூத்துக்குடியில் மரியாதை அஞ்சலி!!
அடுத்த
தூத்துக்குடி பாத்திமா நகர் மணல்மேட்டின் பாதுகாவலி புனித பாத்திமா அன்னை ஆலய பெருவிழா ஆனந்தகளிப்புடன் தொடக்கம்!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026