கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், வடக்கு காரசேரி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.13.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலைக்கடையும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடமும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகராஜா நயினார், ஜான்சிராணி, உதவி பொறியாளர் தளவாய், பணி மேற்பார்வையாளர் சிவகுமார், வட்டார வழங்கல் அலுவலர் சகிலா, வருவாய் ஆய்வாளர் கவிதா, ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ்காந்தி, இளைஞரணி நிர்வாகிகள் ராஜாமணி, கொம்பையா, மகளீரணி கனகா, கிளை செயலாளர்கள் நம்பி, முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள், கூட்டுறவு சங்க தலைவர் அய்யம்பெருமாள், பொட்டாலூரணி ராஜதுரை, ஊராட்சி செயலர் அஞ்சலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், வட வல்லநாடு ஊராட்சி, விளாத்திகுளம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கம் திறந்து வைக்கப்பட்டது. மேலும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டு அறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகராஜா நயினார், ஜான்சிராணி, உதவி பொறியாளர் தளவாய், பணி மேற்பார்வையாளர் சிவகுமார், வருவாய் ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவலர் ரம்யா, ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ்காந்தி, ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபு, இளைஞரணி கொம்பையா, கிளை செயலாளர் முருகன், ஊராட்சி செயலர் சங்கர் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
கருங்குளம்–விளாத்திகுளம் வளர்ச்சி பணிகள்: புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி.சண்முகையா!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
திமுக இளைஞர் அணி செயல்வீரர் திருமணம்: மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் வாழ்த்து!!
அடுத்த
விளாத்திகுளம் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை: அடிக்கல் நாட்டிய எம்.சி.சண்முகையா எம்எல்ஏ – தேசிய வேலை உறுதி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026