தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், அய்யனடைப்பு ஊராட்சியில் உள்ள ஐ.டி.ஐ வளாகத்தில் ரூ.1015.20 லட்சம் மதிப்பில் பல்நோக்கு பாதுகாப்பு மையம் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் துவங்கியுள்ளன.
இந்தப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி துவக்கி வைத்தார்.
விழாவில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன், கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, வருவாய் கோட்டாட்சியர் பிரபு, வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின், வட்டார வளர்ச்சி அலுவலர் ஹைக்கோட் ராஜா, ஒன்றிய பொறியாளர் ரவி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும், தூத்துக்குடி மத்திய ஒன்றிய கழக செயலாளர் ஜெயக்கொடி, மாவட்ட பிரதிநிதிகள் நாகராஜன், செல்வின், ஒன்றிய துணைச் செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன், மாவட்ட மகளிர் சமூக வலைதள அமைப்பாளர் மீனாட்சி, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் அன்னசெல்வி, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு தலைவர் பொன்னரசு, ஒட்டப்பிடாரம் சமூக வலைதள பொறுப்பாளர் சின்னதுரை, மாநில இளம் பேச்சாளர் சண்முக நாராயணன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சைமன், மாணவரணி சற்குணம், தகவல் தொழில்நுட்ப அணி மணிகண்டன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜ், ஒன்றிய கலை இலக்கிய பகுத்தறிவு அமைப்பாளர் அன்பரசன், கிளை செயலாளர் சின்னதுரை ஆகியோர் உட்பட கழக உடன்பிறப்புகள் பலர் பங்கேற்றனர்.
இந்த திட்டம் நிறைவேறிய பின் அய்யனடைப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களுக்கு அவசரகால பாதுகாப்பு மற்றும் பல்நோக்கு சேவைகள் ஒரே இடத்தில் கிடைக்கும் வசதி ஏற்படவுள்ளது.
தூத்துக்குடி
அய்யனடைப்பில் ரூ.1015.20 லட்சம் மதிப்பில் பல்நோக்கு பாதுகாப்பு மைய கட்டிடம் – கனிமொழி கருணாநிதி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழையும் மக்கள் வெள்ளமும் — கந்த சஷ்டிக்கு பாஸ் இல்லை, பொறுமையுடன் வருக!
அடுத்த
பசுமை பணியில் புதிய அத்தியாயம் — 389வது வார மரக்கன்று நடும் நிகழ்ச்சி தூத்துக்குடியில்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026