“மரங்களும் மழலைகளும் ஒன்று; சரியாக வளர்த்து ஆளாக்கினால், வரும் தலைமுறை ஆரோக்கியமாக இருக்கும்” என்ற நோக்கத்துடன் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொடர்ந்து செயல்பட்டு வரும் ALL_CAN_TRUST அமைப்பின் சார்பில், இன்று (26.10.2025) தூத்துக்குடி திரேஸ்புரம் காந்தி இர்வின் உப்பு சங்கம், பெந்தேகோஸ்தே சபை அருகில் உள்ள பகுதியில் 389வது வார மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பசுமை வளர்ச்சி நோக்கில் சமூகப் பொறுப்புடன் செயல்படும் இளைஞர்கள், பொதுமக்கள் இணைந்து பல்வேறு வகை மரக்கன்றுகளை நடவு செய்தனர். “மரம் வளர்ப்போம், இயற்கையை பாதுகாப்போம்” என்ற வாசகத்துடன் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுற்றுப்புறத்தை பசுமையாக மாற்றி இயற்கை சமநிலையை பேணும் நோக்கில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மக்கள் தங்கள் வீடுகள், பள்ளிகள், பொது இடங்கள் ஆகியவற்றில் குறைந்தது ஒரு மரம் நடும் பழக்கத்தை உருவாக்க வேண்டும் என ALL_CAN_TRUST குழுவினர் வலியுறுத்தினர்.
மழையும் மண்ணும் இணைந்த பசுமையான சூழல் உருவாக வேண்டுமெனும் எண்ணத்துடன், இந்நிகழ்ச்சி தூத்துக்குடி நகரில் பசுமை பாதையை உருவாக்கும் சிறந்த முயற்சியாக திகழ்கிறது.
தூத்துக்குடி
பசுமை பணியில் புதிய அத்தியாயம் — 389வது வார மரக்கன்று நடும் நிகழ்ச்சி தூத்துக்குடியில்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அய்யனடைப்பில் ரூ.1015.20 லட்சம் மதிப்பில் பல்நோக்கு பாதுகாப்பு மைய கட்டிடம் – கனிமொழி கருணாநிதி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்!!
அடுத்த
கந்தசஷ்டி களைகட்டும் திருச்செந்தூர் — நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026