கர்ம வீரர், கல்வியின் தந்தை என போற்றப்படும் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் 50-வது நினைவு தினம் இன்று (அக்டோபர் 2) அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி தூத்துக்குடி அந்தோணியார் கோவில் அருகே அமைந்துள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு, பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் நிறுவனர் தலைவர் எஸ். பி. மாரியப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைப்பின் பொருளாளர் செல்வகுமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் முருகன், இளைஞர் அணி தலைவர் சிவா, நட்டத்தி ஒன்றிய செயலாளர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
பெருந்தலைவர் காமராஜரின் கல்விக்கான தியாகமும், மக்களுக்கான அரசியல் பணியும் நினைவுகூரப்பட்டு, அவரின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்ற உறுதியுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
தூத்துக்குடி
காமராஜர் 50-வது நினைவு தினம்: தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமையில் – காந்தி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை!!
அடுத்த
தூத்துக்குடியில் காந்தி ஜெயந்தி, காமராஜ் நினைவு நாள் – தேமுதிக சார்பில் மரியாதை!!
இதையும் படிக்கலாம்
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026
மாணவர்களின் தலைமைத்துவ பயணத்திற்கு புதிய தொடக்கம் – ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா கோலாகலம்!!
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026