அண்ணல் காந்தியடிகளின் 157ஆவது பிறந்தநாளையும், பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினத்தையும் முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று காந்தி ஜெயந்தி விழா மாநிலம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அண்ணல் காந்தியடிகளின் சிலைக்கும், பெருந்தலைவர் காமராஜரின் திருஉருவ சிலைக்கும் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் சேகர், ஐசன்சில்வா, ராஜன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன், SC துறை மாவட்ட தலைவர் A.D.பிரபாகரன், ஊடகப்பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், அமைப்பு சாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் பர்ன பாஸ், கலை இலக்கியப் பிரிவு மாவட்ட தலைவர் செல்வராஜ், மாவட்ட செயலாளர்கள் கோபால், நாராயணசாமி, குமாரமுருகேசன், அந்தோணி ஜெயராஜ், கதிர்வேல், மாநகர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மரியா ஆல்வின், முன்னாள் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆரோக்கியம், ஊடகப் பிரிவு மாநில செயலாளர் ஆசீர் செல்வன், மாவட்ட துணைத் தலைவர்கள் ரஞ்சிதம் ஜெபராஜ், அருணாசலம், முத்துராஜ், வார்டு தலைவர்கள் ரத்தன், அந்தோணிசாமி ரெனிஸ் பாபு, சுரேஷ், ரூஸ் வேர்ல்ட், பெனடிட், சுடலைமுத்து உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமையில் – காந்தி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனைக்கு துவக்க விழா!!
அடுத்த
காமராஜர் 50-வது நினைவு தினம்: தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் மரியாதை!!
இதையும் படிக்கலாம்
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026
மாணவர்களின் தலைமைத்துவ பயணத்திற்கு புதிய தொடக்கம் – ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா கோலாகலம்!!
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026