புரட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாளை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) சார்பில் தூத்துக்குடியில் சிறப்பான நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் உத்தரவின்படியும், துணைப் பொதுச் செயலாளர் மாணிக்கராஜா அவர்களின் ஆலோசனையின்படியும், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஐானியேல் சாலமோன் மணிராஜ் தலைமையில் பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர்களும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுமான சுந்தர்ராஜ், சிவபெருமாள், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பாக்கிய செல்வன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணைச் செயலாளர் நவஜீவன் பெரியசாமி, மகளிர் அணி துணைச் செயலாளர் சண்முககுமாரி, முத்துமாலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் மாவட்ட, ஒன்றிய, பகுதி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டு எம்.ஜி.ஆரின் புகழையும், மக்கள் நலத்திற்காக அவர் ஆற்றிய சேவைகளையும் நினைவுகூர்ந்தனர்.