தூத்துக்குடியில், அதிமுக நிறுவனத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் சிறப்பான சமூக சேவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி அண்ணா நகர் 7வது தெரு டூவிபுரம் சந்திப்பில் எம்.ஜி.ஆர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து சிவன் கோவில் அருகிலுள்ள எம்.ஜி.ஆர் படத்திற்கும் மலர்தூவி இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், பழைய மாநகராட்சி முன்பு அமைந்துள்ள எம்.ஜி.ஆர் திருவுருவச் சிலைக்கும், மட்டக்கடை, திரேஸ்புரம், அழகேசபுரம் பகுதிகளில் உள்ள எம்.ஜி.ஆர் படங்களுக்கும், அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள மார்பளவு எம்.ஜி.ஆர் சிலைக்கும் மரியாதை செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சில்வர்புரத்தில் செயல்பட்டு வரும் லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லத்தில் உள்ளவர்களுக்கு மதிய உணவும், வாகைகுளத்தில் உள்ள அலெக்ஸ் கைலாஸ் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது. மேலும், கட்சியினரான 200 பேருக்கு வேஷ்டி, சேலைகளும் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் அவர்களால் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் மில்லே ராஜா, மகளிர் அணி துணைச் செயலாளர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், வர்த்தக அணி செயலாளர் துரைசிங், வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், மாவட்ட மீனவ அணி துணைத் தலைவர் டெலஸ்பர், முன்னாள் மாவட்ட மீனவரணி செயலாளர் அகஸ்டின், முன்னாள் நகர்மன்ற தலைவர் மனோஜ்குமார், துணைத் தலைவர் ரத்தினம், முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன், மாவட்ட முன்னாள் மீனவரணி இணைச் செயலாளர் ஜோசப், பகுதி அவைத்தலைவர் குமார், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ராஜாராம், ஜெயம் பெருமாள், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், நகர செயலாளர் கார்த்தீசன், பகுதி இணைச் செயலாளர் வீரக்கோன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி அசரியான், முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் அன்பு லிங்கம், சங்கரி, வட்ட செயலாளர்கள் சகாயராஜ், ஜெனோபர், அருண்குமார், அந்தோனி ராஜ், முன்னாள் வட்ட செயலாளர்கள் திருமணி, மோகன், கோட்டாள முத்து, முருகேசன், ஜெகதீஸ்வரன், கோபி, பாபநாசம் சகாயராஜ், மாரியப்பன், முன்னாள் கவுன்சிலர் பெருமாள்தாய், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், பெலிக்ஸ், சங்கர், கருப்பசாமி, ராஜேந்திரன், சகாயராஜ், மின்சார பிரிவு கருப்பசாமி, ரவி, சிறுபான்மை பிரிவு அனிஸ்டஸ், மாவட்ட பிரதிநிதி சாந்தி, மாவட்ட மகளிர் அணி சாய் சுதா, ஸ்டாலின், இசக்கிமுத்து, மூக்கையா, அந்தோனி ராஜ், அந்தோனி செல்வராஜ், ஆறுமுகம், சித்திரைவேல், மணிகண்டன், அனல் ராஜசேகர், சிவசாமி, ராஜசேகர், அபுதாஹிர், அப்பாஸ், டேனியல், வெங்கடாசலம், பொன்ராஜ், ஜோதிகா, மாரி, ஆறுமுக நயினார், ஆறுமுகம், சுப்புராஜ், பிச்சையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.