தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் வெற்றித்தளபதி ஆணையின்படி, கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் Ex.MLA வழிகாட்டுதலின் பேரில், தூத்துக்குடி புறநகர் மாவட்டம், தூத்துக்குடி கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட நேரு நகர் பகுதியில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமத்துவப் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவை தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெகதீஸ்வரன் ஏற்பாடு செய்திருந்தார். தூத்துக்குடி புறநகர் மாவட்ட கழக செயலாளர் P. மதன் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள், இணைச் செயலாளர் சுதாகர், பொருளாளர் அருண்குமார், துணைச் செயலாளர் வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் செயற்குழு உறுப்பினர்கள் கவுதம் பாண்டியன், வழக்கறிஞர் நிர்மல்சிங், தீனதயாளன், இக்னேசியஸ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் சுபத்ரா முருகன் மற்றும் தொழிலதிபர் JKR. முருகன் கலந்து கொண்டு சமத்துவப் பொங்கல் விழாவின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினர்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி புறநகர் மாவட்ட இளைஞரணி சார்பில் தொழிலதிபர் A. சுதாகர், தூத்துக்குடி மத்திய மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் விஜூ, தூத்துக்குடி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சேவியர் ஆகியோர் பங்கேற்றனர். அதேபோல் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் ரவீந்திரன், கந்தசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் மணிகண்டன், கணேஷ், ராஜன் மற்றும் மாவட்ட தொண்டரணி நிர்வாகி சந்தன மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி கிழக்கு ஒன்றியத்தின் கிளை மற்றும் சார்பாக நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சமத்துவம், ஒற்றுமை, சகோதரத்துவத்தை வலியுறுத்தும் விதமாக பொங்கல் திருநாளை கொண்டாடினர். இந்த சமத்துவப் பொங்கல் விழா பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.