நாம் இந்தியா் கட்சி மாநில தலைவர் என்.பி. ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டுமானப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதத்தை குறைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“மக்கள் தங்கள் வருமானத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு வரிகளை செலுத்தி வருகின்றனர். அந்த வரிகள் அரசின் பொதுப்பணி ஒப்பந்தங்கள் மற்றும் உதவித்தொகைகள் மூலம் மக்களிடையே புழக்கத்தில் வருகிறது. ஆனால் அதிகமான வரிகளும் கட்டணங்களும் காரணமாக பணப்புழக்க மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொழில்கள் நலிவடைந்து, அரசின் வருவாயும் குறைந்துள்ளது.
தங்க விலை உயர்வு காரணமாக மக்கள் அதிகளவில் கடன் பெற்று பற்றாக்குறையை ஈடு செய்கின்றனர். உணவு தயாரிக்கும் பொருட்கள், வீடுகளுக்கான அத்தியாவசிய உபயோகப் பொருட்கள் மற்றும் அன்றாட பயன்பாட்டுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விகிதம் குறைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
அதேபோல் தொழிற்கூடங்கள், கடைகள், குடோன்கள், திருமண மண்டபங்கள், பஸ் பயணங்கள் போன்ற சேவைகளுக்கான வரிகளும் அதிகமாக உள்ளன. குறிப்பாக வீடு கட்டுவது மக்களுக்கு அத்தியாவசியமாகிவிட்டது. இதற்காக பயன்படுத்தப்படும் கம்பி, சிமெண்ட், மரம், கூரைத் தகடுகள், பைப்புகள், ஓயிலிங், பெயின்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களுக்கு தற்போது 18% ஜிஎஸ்டி விகிதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விகிதத்தை குறைப்பதன் மூலம் பொதுமக்கள் மற்றும் தொழில் துறைக்கு பெரிதும் நிவாரணம் கிடைக்கும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி
கட்டுமானப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விகிதம் குறைக்க வேண்டும் – நாம் இந்தியா் கட்சி மாநில தலைவர் என்.பி. ராஜா வலியுறுத்தல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அத்திமரப்பட்டி – முள்ளக்காடு பகுதியில் மழைக்கு முன் வடிகால் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்க உத்தரவு : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!!
அடுத்த
தூத்துக்குடியில் உயர்தர மின் கோபுர விளக்குகள் அமைக்கும் பணிகள் – மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026