தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வக்பு வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் விவிடி சிக்னல் அருகே மாநகரச் செயலாளர் முத்து தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் முகம்மது ஜான், மாநகரச் செயலாளர் அலாவுதீன் சேட், மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, இந்திய தேசிய லீக் கட்சி தூத்துக்குடி மாவட்ட தலைவர் காஜா முகைதீன், தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி சம்சுதீன், காஜா மற்றும் தோழமைக் கட்சிகள் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
