முத்துக்குளித்துறை பரதர் நலச்சங்க ஆலோசனை கூட்டமானது தூத்துக்குடி பெல் ஹோட்டலில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு பொதுச் செயலாளர் கனகராஜ் தலைமை வகித்தார்.



கூட்டத்தில் முத்துக்குளித்துறை பரதர் நலச்சங்கத்திற்கு சொந்தமான கட்டிடம் கட்ட வேண்டும், சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், சமுதாய மாணவ, மாணவியர் மேற்படிப்பிற்காக சமுதாய அறக்கட்டளை மூலம் உதவி செய்திடவேண்டும், தற்போது தரம் உயர்த்தப்பட்டு விரைவில் திறக்கப்படவுள்ள தூத்துக்குடி விமான நிலையத்தில் மன்னர் 16ம் பாண்டியபதி தேர்மாறன் திருவுருவப்படத்தினை விமான நிலைய கட்டிடத்தில் வைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



நிகழ்ச்சியில், முத்துக்குளித்துறை பரதர் நலச்சங்க பொருளாளர் பியோ, துணைத்தலைவர் ஜான்சன், வழக்கறிஞர் பிரைட்டர், சகாயராஜா, முன்னாள் துணை மேயர் சேவியர், தேர்மாறன் மீட்புக்குழு துணை அமைப்பாளர் இன்னாசி, பெல்லா, ஜான் பெர்னாண்டோ, இருதயராஜ், ஜோ, ராஜீ, ரூல்ஸ்வெல்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.