தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு புதிய பணிகள் தொடக்கம் மற்றும் நிறைவு செய்யப்பட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
தளவாய்புரம் ஊராட்சி மகிழம்புரம் கிராமத்தில் 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைதள நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
அதே ஊராட்சிக்குட்பட்ட தளவாய்புரம் கிராமத்தில் 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை கட்டும் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டி தொடக்கம் வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹைகோர்ட் ராஜா, உதவி பொறியாளர் ரவி, ஊராட்சி செயலர் ரமேஷ், ஒன்றிய கழகச் செயலாளர் புதூர் எஸ்.ஆர். சுப்பிரமணியன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் நாராயணன், ஹரி பாலகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த், மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆறுமுகம், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் கூட்டுடன்காடு ஊராட்சி நடுகூட்டுடன்காடு கிராமத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கத்தை எம்.சி. சண்முகையா திறந்து வைத்தார்.
அந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹைகோர்ட் ராஜா, உதவி பொறியாளர் ரவி, ஒன்றிய துணைச் செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மங்கனி, மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆறுமுகம், ஒன்றிய கலை இலக்கிய அணி அமைப்பாளர் பொன்னரசு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சண்முகநாராயணன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் வசந்த், கிளை செயலாளர் ஆறுமுகம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிகள் முழுவதும் ஊரக மக்கள் உற்சாகமாக கலந்து கொண்டு நன்றி தெரிவித்தனர்.
தூத்துக்குடி
நீர்த்தேக்கம் முதல் நிழற்குடை வரை – ஒட்டப்பிடாரத்தில் வளர்ச்சி ஒளி பரப்பும் சண்முகையா எம்எல்ஏ!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் – 56 பேர் மனு அளித்தனர்!!
அடுத்த
ஒட்டப்பிடாரம் தொகுதியில் 7 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை திறப்பு – எம்.சி.சண்முகையா தலைமையில் விழா!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026