ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 158 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா வழங்கினார்.


நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் தெய்வேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் வர்த்தகர் அணி முத்துக்குமார், சிறுபான்மை அணி ஞானதுரை, மருத்துவர் அணி தங்கவேல்சாமி, இளைஞரணி தங்கதுரை பாண்டியன், பார்த்திபன், ஆதிதிராவிடர் அணி மாடசாமி, கருப்பசாமி, நெசவாளர் அணி செல்வம், நடுவக்குறிச்சி மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இந்த விலையில்லா மிதிவண்டி திட்டம் மாணவ மாணவிகளின் கல்வி பயணத்திற்கு உறுதுணையாக அமைந்துள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.