தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் தன்னூத்து கிராமத்தில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் கலையரங்க கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பொதுமக்களை சந்தித்து, கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவசுப்பிரமணியன், தாசன், துணை வட்டாச்சியர் மாரியம்மாள், கிராம நிர்வாக அலுவலர் சதீஸ்குமார், ஊராட்சி செயலர் பரமசிவன், கருங்குளம் ஒன்றிய செயலாளர் சுரேஷ் காந்தி, மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆறுமுகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பேச்சிமுத்து, இளைஞரணி முருகேசன், கழக நிர்வாகிகள் KTC ராஜா, ஆண்டி, வெள்ளசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் தொகுதி தன்னூத்து கிராமத்தில் 10 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டும் பணிக்கு அடிக்கல்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“தூய்மை பணியாளர்களை தவறாக பயன்படுத்த வேண்டாம்!” — தூத்துக்குடி மேயர் ஜெகனின் எச்சரிக்கை!!
அடுத்த
மாணவர்களுடன் உற்சாக கலந்துரையாடலில் பங்கேற்ற தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026