அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களை, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று காலை கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து நினைவு பரிசு வழங்கினர்.
இந்த நிகழ்வில், கழக வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில்,
வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் MCP ஜீவா பாண்டியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் P.T.R. ராஜகோபால், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் சண்முகதாய், மாவட்ட பிரதிநிதி அன்னத்தாய், முன்னாள் யூனியன் கவுன்சிலர் பெருமாள் தாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் மகளிர் அணியினர் புஷ்பா என்ற பாப்பா, பேச்சியம்மாள், பொண்ணுத்தாய், காளியம்மாள், மல்லிகா, மேரி ஆகியோரும் பங்கேற்று கழகப் பொதுச் செயலாளரை நேரில் சந்தித்து மரியாதை செலுத்தினர்.