தூத்துக்குடி உதயா எசன்ஸ் மார்ட் உரிமையாளரும், தூத்துக்குடி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையாளர்கள் சங்க துணைத் தலைவருமான உதயசந்திரன் (எ) கண்ணன் – தங்கேஸ்வரி (எ) கார்த்திகா தம்பதியரின் மகள் நிவேதா அவர்களின் பூப்புனித நீராட்டு விழா தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் கலந்து கொண்டு நிவேதாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் சோலையப்பராஜா, மாநில துணைத் தலைவர் வெற்றிராஜன், மாநில இணைச் செயலாளர் பீட்டர், மாவட்ட செயலாளரும் , திமுக சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளருமான மகேஸ்வரன் சிங், பொருளாளர் ஆனந்த்பொன்ராஜ், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையாளர்கள் சங்க தலைவர் செந்தில்குமார், செயலாளர் சுதாகர், பொருளாளர் ஜெயராஜ் உள்ளிட்ட வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் மாவட்ட சோடா, கலர் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் நல்லகண்ணன், செயலாளர் தனசேகரன், பொருளாளர் நம்பிராஜன், தங்கம் ஸ்டோர்ஸ் திருமணி, வேலவன் ஹைபர் மார்க்கெட் தங்கவேல், கவின் பேப்ரிக்ஸ் ஜெயக்குமார், பாலசரஸ்வதி சிட்பண்ட்ஸ் பாலகிருஷ்ணன், அபிநயா ஜுவல்லர்ஸ் கிருஷ்ணமூர்த்தி, பிர்பாத் எசன்ஸ் கவுஸ் அகமது இப்ராஹிம் உள்ளிட்ட தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். அத்துடன் திமுக வட்டச்செயலாளர் ரவீந்திரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், கொம்பன் சங்கர், கொம்பன் பாஸ்கர், அகில இந்திய நாடார் பேரவை, பனங்காட்டு மக்கள் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் விழாவில் பங்கேற்றனர்.
பூப்புனித விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் சுந்தரலிங்கம், அனந்தம்மாள், தங்கவேல், ஜெயலீலா, பாஸ்கர், பாக்கியலட்சுமி, ஆனந்தராஜேஷ், ஐஸ்வர்யா, ஷர்வின், புவனேஷ், அனிஸ் கார்த்திகேயன், பாண்டிச்செல்வம், ரேவதி உள்ளிட்டோர் அன்புடன் வரவேற்றனர்.