தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் விரைவில் தொடங்க உள்ள புதிய சாலை பணிகள் நடைபெறவுள்ள இடங்களை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


இந்த ஆய்வின்போது வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவிந்திரன், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ.நிர்மல் ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் ஜெயசீலி, அந்தோணி மார்ஷலின், வட்ட கழக பிரதிநிதி மார்ஷல் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் சாலைகள் தரமான முறையில் அமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட இரண்டாம் கேட் அருகே உள்ள தெப்பக்குளத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளையும் மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.