தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமையகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் விருப்ப மனு வழங்கலாம் என, அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான மாண்புமிகு எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 15ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடுவதற்காகவும், எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையுடனும் பலர் விருப்ப மனுக்கள் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திரு. எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வரும் 23ஆம் தேதிக்குள் தெற்கு மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், சென்னை எம்.ஜி.ஆர். மாளிகையில் விருப்ப மனு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில், தூத்துக்குடியைச் சேர்ந்த முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, டூவிபுரத்தில் அமைந்துள்ள அதிமுக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திரு. எஸ்.பி. சண்முகநாதனை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். அவர், வரும் 23ஆம் தேதிக்குள் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, இதற்கு முன்பு நகர்மன்ற உறுப்பினராகவும், மாவட்ட மகளிரணி செயலாளராகவும், தூத்துக்குடி மாநகர மேயராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக மகளிரணி தலைவியாக பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி
தூத்துக்குடி சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி களமிறங்க விருப்பம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அமமா மக்கள் முன்னேற்றக் கழக செயற்குழு–பொதுக்குழுக் கூட்டம் ஜனவரி 5ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறுகிறது!!
அடுத்த
தூத்துக்குடியில் வியாபார தளங்களில் தமிழ்ப்பெயர்கள் கட்டாயம் – ஆட்சிமொழிச் சட்ட வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026