தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த 15 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடுவதற்கும், எடப்பாடி தொகுதியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட வேண்டும் என வலியுறுத்தியும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விருப்ப மனுக்கள் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வரும் 23 ஆம் தேதிக்குள் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் சென்னை எம்.ஜி.ஆர் மாளிகையில் விருப்ப மனு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
அதன்படி, தூத்துக்குடியைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநரணி செயலாளருமான சுதாகர், டூவிபுரத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதனை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். பின்னர், சென்னை அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை அவர் தாக்கல் செய்தார்.
இந்த நிகழ்வின்போது, தெற்கு மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், இளைஞரணி துணைச் செயலாளர் டைகர் சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் விருப்பமனு தாக்கல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி – அதிமுக சார்பில் போட்டியிட டாக்டர் கோசல்ராம் ராஜா விருப்ப மனு தாக்கல்!!
அடுத்த
தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் வக்கீல் மைக்கேல் ஸ்டனிஸ் பிரபு விருப்பமனு தாக்கல்!!
இதையும் படிக்கலாம்
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026
மாணவர்களின் தலைமைத்துவ பயணத்திற்கு புதிய தொடக்கம் – ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா கோலாகலம்!!
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026