மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையங்களை மக்கள் பயன்பாட்டிற்காக காணொளிக் காட்சிகள் வாயிலாகத் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி 48 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கால்டுவெல் காலனியில் நகர்ப்புற நல்வாழ்வு மையத்தை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் குத்துவிளக்கு ஏற்றி நல்வாழ்வு மையத்தை பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், மாநகராட்சி நகர்நல அலுவலர் செல்வ வினோஜினி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மண்டல தலைவர் பால் குருசாமி, கவுன்சிலர்கள் ராஜேந்திரன், வைதேகி, சரவணக்குமார், விஜய குமார், முத்தையா புரம் பகுதி மேக நாதன், பிரையன்ட் நகர் பகுதி ராமகிருஷ்ணன், மருத்துவ அணி அருண்குமார், சுற்றுச்சூழல் அணி மகேஷ்வரன் சிங், தகவல் தொழில்நுட்ப அணி அண்ணா துரை, நெசவாளர் அணி இசக்கி துரை, வட்ட செயலாளர்கள் மூக்கையா, நவநீத கிருஷ்ணன், சிங்கராஜ், பொறியாளர் அணி லிங்கராஜ், கலை இலக்கிய மரியராஜ், வட்ட பிரதிநிதிகள் ரா. கணேஷ் குமார், ரஜினி முருகன், செல்வேந்திரன், ரமேஷ், வெள்ளை துரை, ரகுபதி, 44 வது வார்டு சரவணன், ஜேசு பாலன், பிரையன்ட் நகர் பகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி குமார், லோக நாதன், தேன் ராஜ், இளைஞரணி பிரதீப், உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

