பள்ளி மாணவி ஜனனி படுகொலைக்கு நீதி கேட்டு தூத்துக்குடி மாவட்ட அனைத்து விஸ்வகர்மா சமுதாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமானது சுதந்திர போராட்ட தியாகி விருதுநகர் கே.எஸ். முத்துசாமி ஆச்சாரி வீரமுழக்க மேடை தூத்துக்குடி பாளை ரோடு விவிடி சிக்னல் சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் இன்று காலை நடைபெற்றது.


ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டம் புலிவலம் கிராமம் விஸ்வகர்மா சமுதாயத்தைச் சேர்ந்த எஸ். ஜெகத்குமார் ஆச்சாரி என்பவரின் மகள் ஜனனி (15) ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவி காதலிக்க மறுத்த காரணத்தினால் கடந்த (28.5.2025) அன்று அவரது வீட்டில் வைத்து கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.

மேலும் அவரது உறவினர் மகள் லட்சயா (வயது 17) என்ற பள்ளி மாணவியையும் கத்தியால் குத்தி படுகாய்படுத்தி உள்ளார். மேற்படி மாணவி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார். கொலையாளியை ஊர் பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் விஸ்வகர்மா சமுதாயத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மகளை பறிகொடுத்த பெற்றோர்கள் செய்வதறியாமல் பிரமை பிடித்து மீளாத துயரத்திலிருந்து இன்றுவரை மீண்டும் வர முடியவில்லை, சம்பவம் நடந்ததை இதுவரை தமிழக அரசோ, அரசியல் கட்சிகளோ, ஊடகங்களோ, இந்த குடும்பத்தை அனாதையாக பாவித்து கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். மாற்று சமுதாயமாக இருந்தால் அனைத்து அரசியல் கட்சிகளும், ஊடகங்களும், நீதி நிதி மற்றும் பாதுகாப்பு கொடுக்க வரிந்து கட்டிக்கொண்டு வருவார்கள்.


தமிழக அரசு உடனே இதில் தலையிட்டு பாதிக்கப்பட்ட விஸ்வகர்மா ஜனனி குடும்பத்திற்கு நீதியும் நிதி நிவாரணமும் அரசு வேலையும் தகுந்த பாதுகாப்பு வழங்கிடவும் கொலை வழக்கு உச்சபட்ச தண்டனை வழங்க கோரியும் மற்றும் தமிழக அரசை கண்டித்தும், கண்டன கோஷங்களை எழுப்பியும் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட விஸ்வகர்மா சமுதாய மகாஜன பேரவை தலைவர் முருகேசன் ஆச்சாரி தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட விஸ்வகர்மா சமுதாய மகாஜன பேரவை செயலாளர் முருகன் ஆச்சாரி, தூத்துக்குடி விஸ்வகர்மா கூட்டுறவு கடன் சங்கம் முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன் (எ) கிட்டு ஆச்சாரி, முன்னாள் நிர்வாக இயக்குனர் வசந்த் குமார் ஆச்சாரி, விஸ்வகர்மா நகை தொழிலாளர் சங்கம் முன்னாள் தலைவர் பெருமாள் ஆச்சாரி, முன்னாள் தலைவர் ஐயப்பன் ஆச்சரி, விஸ்வபுரம் முன்னாள் வார்டு உறுப்பினர் மாரியப்பன் ஆச்சாரி, எம்.கே.டி. பேரவை வடக்கு மாவட்டம் கோவில்பட்டி கண்ணன் ஆச்சாரி, விளாத்திகுளம் விஸ்வகர்மா சமுதாய ஒருங்கிணைப்பாளர் பொன்ராஜ் ஆச்சாரி, புரோகிதர் காயல்பட்டினம் சிவப்பேச்சிமுத்து ஆச்சாரி, சமுதாய போர்வாள் மாரிக்கனி ஆச்சாரி, சமுதாய வீர மங்கை ரோஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


ஆர்.எஸ்.எம். மூர்த்தி ஆச்சாரி, பாலமுருகேசன் ஆச்சாரி, பாலசுப்பிரமணியன் ஆச்சாரி, மாடசாமி ஆச்சாரி, முருகேசன் ஆச்சாரி, படுகொலை செய்யப்பட்ட ஜனனியின் தந்தை மற்றும் தாய் ஜெகத்குமார் ஆச்சாரி, பிரியங்கா, தங்கராஜ் ஆச்சாரி, முத்துசாமி ஆச்சாரி, தர்மராஜ் ஆச்சாரி, கே.எஸ். முத்துச்சாமி ஆச்சாரி, மாரியப்பன் ஆச்சாரி, ஆறுமுகம் ஆச்சாரி, ரவி ஆச்சாரி, சங்கரலிங்கம் ஆச்சாரி, ராஜேந்திரன் ஆச்சாரி, செல்வ சங்கர் ஆச்சாரி, ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்மா கூட்டமைப்பு விஸ்வகர்ம ஜகத் குருஸ்ரீலஸ்ரீ பாபுஜீ சுவாமிகள் ஆச்சாரி, சுதந்திர போராட்ட தியாகி கே.எஸ். முத்துசாமி ஆச்சாரி இளைஞர் பேரவை நிறுவனர் எம்.எம். சாமி (எ) ஜி.கே.ஆர். ராஜா ஆச்சாரி ஆகியோர் கலந்து கொண்டு எழுச்சியுரை நிகழ்த்தினார்கள்.


ஆர்பாட்டத்தில் இசக்கி ஆச்சாரி, சுப்பையா ஆச்சாரி, மகாராஜன் ஆச்சாரி, கணேசன் ஆச்சாரி, பாலா ஆச்சாரி, சுப்பிரமணி ஆச்சாரி, செல்லையா ஆச்சாரி, சுப்பையா ஆச்சாரி, ராஜேந்திரன் ஆச்சாரி, ஜெகன் ஆச்சாரி, கருப்பசாமி ஆச்சாரி, மாரியப்பன் ஆச்சாரி, சண்முகவேல் ஆச்சாரி, மணிகண்ட ஆச்சாரி, உமா விக்னேஸ்வரமூர்த்தி ஆச்சாரி, மாடசாமி ஆச்சாரி, இசக்கிராஜ் ஆச்சாரி, பிரையன்ட் நகர் 10 வது தெரு எஸ். மணிகண்டன் ஆச்சாரி, ஆட்டோ அருண் ஆச்சாரி, வெள்ளப்பெருமாள் ஆச்சாரி, ஐயப்பன் ஆச்சாரி, உச்சிமாகாளி ஆசாரி, செல்வம் ஆச்சாரி, பாலசுப்பிரமணியன் ஆசாரி, மாடசாமி ஆச்சாரி, மதன்குமார் ஆச்சாரி, கல்யாண சுந்தர் ஆச்சாரி, மாடசாமி ஆச்சாரி, லெட்சுமணன் ஆசாரி, பிரையன்ட் நகர் மருமகன் சுந்தர் ஆச்சாரி, உட்பட தெற்கு சம்பந்த மூர்த்தி தெரு, அண்ணா நகர், விஸ்வபுரம், தாளமுத்து நகர், மாதா நகர், அழகேசபுரம், பி.என்.டி காலனி, சோரீஸ் புரம், கோரம்பள்ளம், மேலதட்டபாறை, செக்காரக்குடி, தெய்வச்செயல்புரம், எல்லைநாயக்கன்பட்டி, புதுப்பட்,டி புதுயம்புத்தூர், விஸ்வகர்ம ஐந்து தொழிலாளர் சங்கம், ஓட்டப்பிடாரம், வெள்ளாரம், பசுவந்தனை, கடம்பூர், கயத்தாறு, கழுகுமலை, நாலாட்டின்புதூர், கசவன்குன்று, குருவி நத்தம், கோவில்பட்டி, எட்டையாபுரம், மேலநம்பியாபுரம், விளாத்திகுளம், மேல்மாந்தை , சிவஞானபுரம், வேலாயுதபுரம், குளத்தூர், குறுக்குச்சாலை, கூட்டம்புளி, சிறுதொண்டநல்லூர், முத்தையாபுரம், ஆத்தூர், ஆறுமுகம் மங்கலம், பழைய காயல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர், மூக்குப்பீறி, குரும்பூர், வாழையடி, அம்பலசேரி, பேய்குளம், மூலக்கரைப்பட்டி, பருத்திப்பாடு, திருமலாபுரம், சாத்தான்குளம், உடன்குடி, குலசேகரப்பட்டணம், உள்ளிட்ட கிராம விஸ்வகர்மா நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

ஸ்ரீ விஸ்வபிரம்மா மீடியா நெட்வொர்க் நிறுவனர் சுடலை ஈஸ்வரன் ஆச்சாரி நன்றியுரை நிகழ்த்தினார்.