தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்தம்மாள் காலனி பகுதியில் வடிகால் மற்றும் சாலை பணிகள் தொடங்க உள்ளன. இந்த பணிகள் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்நிலையில், பணிகள் தொடங்கவுள்ள பகுதிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இவ்வாய்வில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு. ரவீந்திரன் அவர்கள், மாநகர சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் திரு. பொன்ராஜ் அவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.