மழைக்காலத்தில் நோய்கள் பரவும் அபாயம் அதிகரிப்பதை முன்னிட்டு, கலையும் கல்வியும் முனைவர் சகா. மா. சங்கர் பொதுமக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய சுகாதார வழிமுறைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு பதிவை வெளியிட்டுள்ளார்.

மழைக் காலங்களில் வீட்டு கழிவறைகளை மேலும் அதிக கவனத்துடன் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பாம்பு, கரப்பான் பூச்சி, பல்லி, தவளை, பூரான், விஷ பூச்சிகள் போன்றவை கழிவறை பைப்புகளில் தஞ்சம் அடைவது அதிகம். எனவே குழந்தைகளை கழிவறையை பயன்படுத்தச் செய்வதற்கு முன் தண்ணீர் ஊற்றி, எதுவும் உள்ளதா என்பதை சரிபார்த்து பின்னர் பயன்படுத்தச் செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், மழைக்காலங்களில் கழிவறைகளையும் சுற்றுப்புறங்களையும் அடிக்கடி சுத்தம் செய்வது கட்டாயம். வெளிப்புறம் காடுகள், முட்புதர்கள் போன்ற இடங்களை கழிப்பிடமாக பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பொதுக் கழிப்பறைகளை பயன்படுத்தும் போது, பயன்படுத்திய பின் நன்றாக தண்ணீர் ஊற்றி வெளியே வருவது ஒவ்வொருவரின் பொறுப்பு எனவும் கூறப்பட்டுள்ளது.

“நம் வாழ்விடத்தை நாமே சுத்தமாக வைத்தால் சிறு சிறு நோய்கள் வராது. வருமுன் காப்போம் என்பது ஒரு பழமொழி மட்டும் அல்ல; நம் வாழ்வியல் நடைமுறை கூட. என்றும் ஆரோக்கியமாக வாழ்வோம், சுத்தமாக இருப்பிடத்தை உருவாக்கிக் கொள்வோம்,” என முனைவர் சகா. மா. சங்கர் தனது விழிப்புணர்வு பதிவில் தெரிவித்துள்ளார்.

அவரது தொடர்பு எண்: 9944662279.