தூத்துக்குடி மாவட்டம், அய்யனடைப்பு ஊராட்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்ட 220 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிடத்தின் திறப்பு விழா இன்று (22/11/2025) சிறப்பாக நடைபெற்றது.

திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடத்தைத் திறந்து வைத்து, புதிய வீடுகளுக்கான குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகளைப் பயனாளிகளுக்கு வழங்கினார்.

பொதுமக்கள் நலனை முன்னிறுத்திய இந்த முக்கிய திட்டம், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான பாதுகாப்பான மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய வாழ்விடத்தை வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பயனாளர்கள், அரசின் மக்கள் நலப் பணிகள் குறித்து தங்களது திருப்தி மற்றும் நன்றிகளை தெரிவித்தனர்.