தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கரின் 134 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று(14.04.2025) தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகில் அமைந்துள்ள முழு உருவ சிலைக்கு மாவட்ட துணைச் செயலாளர் சூசைமுத்து தலைமையில், மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல் மாவட்ட பொருளாளர் பழனிவேல், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை, நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார், ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் அருள்ராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், மாநகரச் செயலாளர் உதயசூரியன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் குருவம்மாள், நாடார் பேரவை மகளிர் அணி தலைவி சந்திரா, மகளிர் அணி துணைச் செயலாளர் ஜேசுசெல்வி, ராசாத்தி, கன்னியம்மாள், மாநகர அவைத்தலைவர் மதியழகன், ஸ்ரீராம், உள்பட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.