திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் மறைந்த முன்னாள் திமுக மகளிர் அணிச் செயலாளர் ராஜம் ஜான் அவர்களின் உடலுக்கு, திமுக துணைப் பொதுச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
ராஜம் ஜான் அவர்களின் குடும்பத்தினரிடம் ஆறுதல் வழங்கிய கனிமொழி கருணாநிதி, மகளிர் முன்னேற்றத்திற்காக அவர் செய்த பணிகள் கட்சிக்கும், சமூகத்திற்கும் நினைவில் நிலைத்திருக்கும் என குறிப்பிட்டார்.
அஞ்சலி செலுத்திய நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் இரா. ஆவுடையப்பன், திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கிரகாம்பெல் உள்ளிட்ட பல திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி
திமுக மகளிர் அணியின் அர்ப்பணிப்பு தலைவி ராஜம் ஜான் மறைவு: கனிமொழி கருணாநிதி நேரில் அஞ்சலி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மருதூர் அணைக்கட்டில் நீர்வரத்து அதிகரிப்பு: பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க ஆட்சியர் இளம் பகவத் அறிவிப்பு!!
அடுத்த
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மழை பாதிப்பு: கனிமொழி கருணாநிதி நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026