தூத்துக்குடி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் கடந்த 22.03.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.


இந்தக் கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் அமைச்சர் கீதாஜீவன், மாநிலங்களவை உறுப்பினர் கான்ஸ்டன்ட்டைன் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு, 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கட்சித் திட்டங்கள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசனை வழங்கினர். திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவதற்காக அடிப்படை நிலை முதல் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


மேலும், மீண்டும் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்கும் வகையில் நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். இக்கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் சுசி ரவீந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


ஒன்றிய, பகுதி, பேரூர் மற்றும் மாநகர மட்ட நிர்வாகிகள், பாக ஒருங்கிணைப்பாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு, தேர்தல் பணிகளை சிறப்பாக முன்னெடுக்க உறுதி எடுத்தனர்.