தூத்துக்குடி மாநகராட்சி 45வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கட்டபொம்மன் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ வீரசந்தண மாரியம்மன் கோயிலில் கால் நாட்டு விழா இன்று (24.03.2026) காலை பக்தி மிகுந்த சூழலில் சிறப்பாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கோயில் ஆண்டு திருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை (29.03.2026) மாலை தொடங்கி புதன்கிழமை (01.04.2026) மதியம் வரை விமரிசையாக நடைபெற உள்ளது.
திருவிழா நிகழ்ச்சிகளின் முக்கிய அம்சங்களாக, ஞாயிற்றுக்கிழமை இரவு விளக்கு பூஜை நடைபெறும். திங்கட்கிழமை மாலை தீர்த்தக்கரை சென்று அம்மனை அழைத்து வருதல் நடைபெறும்.
செவ்வாய்கிழமை யாக பூஜை, மதியக்கொடை, அன்னதானம் மற்றும் சாமக்கொடை நடைபெறும். புதன்கிழமை காலை பொங்கல் வைத்து, கிடா வெட்டு நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடையும். இந்த திருவிழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றுச் செல்லுமாறு கோவில் விழாக்குழு சார்பில் அன்புடன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், திருவிழா சிறப்பாக நடைபெற பக்தர்கள் தங்களின் நன்கொடைகளை வழங்கி பேராதரவு அளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அருள்மிகு ஶ்ரீ வீரசந்தண மாரியம்மன் கோவில் விழாக்குழு நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.