தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் (அரசு உதவி பெறும் பள்ளி) பணியாற்றும் ஆசிரியர்கள் மீது கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (30.10.2025) மதியம் சுமார் 12.30 மணியளவில், பள்ளியின் முன்னாள் செயலராக இருந்த ரமேஷ் என்பவர், தன்னுடன் M.S.S. சுரேஷ் மற்றும் சில அடியாட்களுடன் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து ஆசிரியர்களை மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பந்தப்பட்ட ரமேஷ், கடந்த 26.10.2025 அன்று நடைபெற்ற காரப்பேட்டை மகமை பொதுக்குழுக் கூட்டத்தில், அவரது தவறான மற்றும் ஒழுங்கற்ற நடவடிக்கைகள் காரணமாக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகவும், அதற்கு 165 மகமை உறுப்பினர்கள் கையொப்பமிட்டிருந்ததாகவும் பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நீக்கப்பட்ட நிலையில் அவர் இன்று பள்ளிக்கு நுழைந்து செயலர் M.G.M. ஆசிரியர்களையும் பணியாளர்களையும் நோக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இதனால் பள்ளியில் கடும் பதற்றம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அவர் செயலராக இருந்த காலத்தில் ஆசிரியர்களை கொடுமையாக நடத்தி, வெயிலில் சாக்கடைத் தண்ணீரை பைப் மூலம் தெளிக்கச் செய்தது உள்ளிட்ட பல மோசமான செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அதுமட்டுமின்றி, “ஆசிரியர்கள் தங்கள் மனைவிகளுடன் பேசுவதற்கும் என்னிடம் அனுமதி வாங்க வேண்டும்” என ஆணவமாக கூறியதாகவும் புகார்கள் உள்ளன. தற்போது பதவி ஆசையில் மீண்டும் அதிகாரம் பிடிக்க முயன்று, ஆசிரியர்களை மிரட்டிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தால் 42 ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் தங்களின் உயிர் பாதுகாப்புக்கு அச்சம் அடைந்துள்ளனர். தமிழக அரசு மற்றும் கல்வித்துறை உடனடியாக தலையிட்டு ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பும் உயிர் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி பள்ளியில் கொலை மிரட்டல் பரபரப்பு – ஆசிரியர்கள் உயிர் அச்சத்தில்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி நகர நெரிசலை நிமிடங்களில் சமன் செய்த ஆய்வாளர் மயிலேரும் பெருமாள் — பொதுமக்கள் பாராட்டி மகிழ்ச்சி!
அடுத்த
சத்தியம் தொலைக்காட்சி உரிமையாளர் மகன் திருமணத்தில் கலந்து கொண்ட புரட்சி பாரதம் கட்சி தலைவர் டாக்டர் பூவை எம். ஜெகன்மூர்த்தியார்!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026