சத்தியம் தொலைக்காட்சியின் உரிமையாளர் அவர்களின் மகன் ஆலன் பால் ஐசக் திருமண விழாவில், புரட்சி பாரதம் கட்சி தலைவர் மற்றும் கே.வி. குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பூவை எம். ஜெகன் மூர்த்தியார் கலந்து கொண்டு மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்தினார்.

அவருடன் மாநில செய்தித் தொடர்பாளர் கே.எஸ். ரகுநாத், மாநில இளைஞரணி செயலாளர் வலசை தர்மன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஆலை ஜி. சிவலிங்கம் ஆகியோரும் இணைந்து கலந்து கொண்டனர்.

திருமண நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மணமக்களுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.