கல்லூரிக் கல்வி இயக்குநரகம், திருநெல்வேலி பிரிவு சார்பில் 2025–2026 கல்வியாண்டிற்காக “ஆறு கோடி பனைவிதைகள் நட்டிடும் பனைமரக் காப்பு இயக்கம்” மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரி (தன்னாட்சி) தாவரவியல் துறை சார்பில் கல்லூரி வளாகத்தில் பனைவிதை நடு விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தாவரவியல் துறைத் தலைவர் அருட்சகோதரி முனைவர் ஆரோக்யை ஜெனீசியஸ் அல்போன்ஸ் தலைமையிலாக துறை பேராசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
பனைமரம் சுற்றுச்சூழல் சமநிலைக்கு முக்கிய பங்காற்றுவதாகவும், நீர்வளத்தை பாதுகாக்கும் திறன் கொண்டதாகவும் பேசப்பட்டு, இளம் தலைமுறையில் பனைமரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மேலும், நீர்நிலைகளுக்கு அருகில் வசிக்கும் மாணவிகள் தாவரவியல் துறையிலிருந்து பனைவிதைகளை பெற்றுக்கொண்டு தங்களது பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள், ஓடைகள் அருகில் அவற்றை நட்டிடுமாறு தாவரவியல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இந்த விழா பனைமர வளர்ச்சிக்கான சமூகப் பொறுப்புணர்வை மாணவமணிகளிடையே வளர்த்ததோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கல்லூரியின் உறுதியான பங்கையும் வெளிப்படுத்தியது.
தூத்துக்குடி
பனைமரக் காப்பு இயக்கத்தில் தாவரவியல் துறையின் பங்களிப்பு – செயின்ட் மேரிஸ் கல்லூரியில் பனைவிதை நடு விழா!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அமைச்சர் கீதா ஜீவன் தகவல்: கோவில்பட்டியில் கலைஞர் வெண்கல சிலை திறந்து வைக்க வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
அடுத்த
ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையா – தொடர் திருமண விழாக்களில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026