தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நலச் சங்கம் (TCOA) தூத்துக்குடி மாவட்டத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழா மாநாடு தூத்துக்குடி பாளை ரோடு வாட்டர் டேங்க் எதிரில் உள்ள மணி நகர் ராமலெட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மாநாட்டில் TCOA & TCCL குழும நிறுவனத் தலைவர் சகிலன் பங்கேற்று எழுச்சியுரையாற்றினார். பின்னர், மரணம் அடைந்த ஆபரேட்டர்களின் குடும்பங்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதி, இளைஞர் ஆபரேட்டர்களுக்கு திருமண உதவித்தொகை மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பு செய்தார்.

மாநாட்டுக்கு தலைமை தாங்கிய மாநில துணை தலைவர், மாவட்ட தலைவர் ராஜேந்திர பாபு, வரவேற்புரை அளித்த மாவட்ட செயலாளர் கண்ணன், நன்றியுரை வழங்கிய மாவட்ட பொருளாளர் ராஜூ ஆகியோர் நிகழ்ச்சியை முன்னனுப்பினர். MD TIC FIBER தணிகைவேல், மாநில தலைவர் வெள்ளைச்சாமி, மாநில பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில பொருளாளர் கோவர்த்தனன், மாநில துணை தலைவர் சண்முகசுந்தரம், துணை தலைவர் தாமோதரன், மாநில துணை தலைவர் வீரமுத்து உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

மாநாட்டில் மாவட்ட துணை தலைவர்கள் செல்வராஜ், சக்ரவர்த்தி, கெங்குராஜ், ரவி சங்கர், பொன்ராஜ், அருபநாதன், கிருஷ்ணன், கார்த்தீசன், சங்கர நாராயணன், வழக்கறிஞர் ஏ.பி.செல்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதேபோல் மாநில துணை தலைவர் அருணகிரி, மாநில துணை செயலாளர் விஷ்ணுவர்தன், மாநில துணை தலைவர் தமிழன், துணை செயலாளர் கந்தன், துணை செயலாளர் குமரேசன், துணை தலைவர் பிரகதீஸ்வரன், துணை செயலாளர் ஆனந்தன், சேகர், வெங்கடேசன், தங்கையன், பாபு, சிவக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாநாடு தொடங்குவதற்கு முன், வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடிகம்பத்தில் மாநில தலைவர் வெள்ளைச்சாமி கொடியேற்றி சிறப்பு செய்தார். மாநாட்டில் மாவட்ட செயற்குழு, தாலுகா நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும், மரணம் அடைந்த கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் பணியாளர்களுக்காக ஒருநிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதை அடுத்து மாநாடு நிறைவு பெற்றது.