தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சியின் செயல்வீரரும், உறுதியான தொழிற்சங்க வாதியுமான, கடம்பாகுளம் ஆயக்கட்டு விவசாயிகள் நலச்சங்கத்தின் தலைவருமான தோழர் உத்திரம் நினைவேந்தல் புகைப்படத் திறப்பு நிகழ்வு (31.01.2026 – சனிக்கிழமை) காலை 11 மணியளவில் தூத்துக்குடி பாத்திமா நகரில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.


இந்த நினைவேந்தல் நிகழ்விற்கு தோழர் சுஜித் தலைமை வகித்தார். நினைவேந்தலில் உரையாற்றியவர்களாக தோழர் பாண்டியன் அம்பை, தோழர் மாரிச்செல்வம் (மாவட்ட செயலாளர், புரட்சி பாரதம்), பேராசிரியர் பாத்திமா பாபு (ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம்), தோழர் மலரவன், தோழர் சே. மா. சந்தனராஜ் பாண்டியன் (தமிழர் விடியல் கட்சி, மாவட்ட செயலாளர்), தோழர் கிருஷ்ணமூர்த்தி (எ) கிட்டு (ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு), தோழர் பால் ராசேந்திரன் (மாவட்ட காப்பாளர், திராவிடர் கழகம்), தோழர் திருப்பதி, தோழர் பால் பிரபாகரன் (மாநில கொள்கை பாப்பு செயலாளர், திராவிடர் விடுதலை களம்), தோழர் கா.மை. அகமது இக்பால் (சமூக செயற்பாட்டாளர்) ஆகியோர் கலந்துகொண்டு தோழர் உத்திரம் அவர்களின் போராட்ட வாழ்க்கை, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு பணிகள் குறித்து உரையாற்றினர்.


நிகழ்வில் மேலும் தோழர் எஸ்.ஆர். அகமது (தாயக மக்கள் கட்சி, மாநில பொதுச்செயலாளர்), தோழர் பரமசிவம், தோழர் கெபிஸ்டன் (சமூக செயற்பாட்டாளர்), தோழர் முகமது ஜான் (மனித நேய மக்கள் முன்னேற்ற கழகம், மாநில துணை பொதுச்செயலாளர்), தோழர் பகலவன், தோழர் தாளமுத்து செல்வா (மக்கள் அதிகார கழகம், நெல்லை மண்டல செயலாளர்), தோழர் மருதப் பெருமாள் (தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம், மாநில தலைவர்) ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.


மேலும் இந்த நிகழ்வில் தோழர் அசன் (மாவட்ட செயலாளர், மனித நேய ஜனநாயக கட்சி), தோழர் ஊர் காவலன் (மாவட்ட செயலாளர், ஆதிதமிழர் கட்சி), தோழர் ஹேமா (திராவிடத் தமிழர் கட்சி) உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


நன்றியுரையை தோழர் சங்கர், தூத்துக்குடி வழங்கினார். இந்த நினைவேந்தல் புகைப்படத் திறப்பு நிகழ்வு புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.