தூத்துக்குடியில், தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவி ஏற்றதை முன்னிட்டு, ஒருங்கிணைந்த நியமனம் செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் நடைபெற்றது.


இந்த நிகழ்விற்கு தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர்கள் ஜேசுதாஸ் மற்றும் சங்கரநாராயணன் தலைமை தாங்கினர். நிகழ்ச்சியில் துணை அமைப்பாளர்களான முனீஸ்வரமூர்த்தி, என்.எஸ். செந்தில்குமார், எம். செந்தூர் பாண்டியன், ஜே. சுமிதா, ஏ. சோமன புனிதா, நிஷாந்த், ரேமண்ட், சிவராஜ் மற்றும் வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.


தமிழகத்தில் புதிய தலைமையின் கீழ் மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் தெரிவித்தனர்.